கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள திரு. பத்திரகே அவர்கள் நியூசிலாந்து மஸ்ஸே பல்கலைக்கழகத்தில் வங்கி முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். வங்கித்துறையில் டிப்ளோமா மேற்பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார். அவர் ஒரு சட்டத்தரணியாவார். பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி, பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பீஎல்சி, பீப்பிள்ஸ் ஃபிளீட் மனேஜ்மென்ட் லிமிட்டெட், பீப்பிள்ஸ் புரொப்பட்டி டெவலெப்மென்ட் லிமிட்டெட் மற்றும் பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் கம்பனி செயலாளராகவும் அவர் கடமையாற்றி வருகின்றார். அவர் வங்கித்துறையில் 22 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.