சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.
தலைமை உள் ஆடிட்டர்
பிரதி பொது முகாமையாளர்