தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்


சொல்
வரைவிலக்கணம்

தொக்கிய வட்டி

பிணையத்தின் மூலமாக கிடைக்கவுள்ள ஆனால் முதலீட்டாளருக்கு இன்னமும் கொடுக்கப்படாத வட்டி

மதிப்பேற்றம்

நாணயப் பெறுமதியின் மதிப்பு அதிகரித்தல்

விலை வேற்றுமை வாணிபம்

விலையில் வேறுபாடு காரணமாக இலாபமீட்டுவதற்கு சொத்து ஒன்றை சமநேரத்தில் கொள்வனவு மற்றும் விற்பனை செய்தல். வேறுபட்ட சந்தைகளில் அல்லது வேறுபட்ட வடிவங்களில் ஒரே மாதிரியான அல்லது ஒத்த நிதியியல் கருவிகளின் விலை வேறுபாடுகளைப் பயன்படுத்தி இலாபமீட்டுகின்ற ஒரு வாணிபமாகும்.

கேட்கும் விலை

விற்பனை செய்யப்படவுள்ள நாணயத்தை வாணிபம் செய்பவர் கொள்வனவு செய்யக்கூடிய வீதம்.

ஏலம்

திறைசேரி பிணையங்களின் பகிரங்க விற்பனை.

அடிப்படை நாணயம்

ஏனைய நாணங்களுடன் ஒரு சோடியில் மேற்கோள் காட்டப்படுகின்ற நாணயம். வழமையாக அமெரிக்க டொலர் ‘அடிப்படை நாணயம்’ என கருதப்படுகின்றது.

சரிவு விலைச் சந்தை

விலைகள் வீழ்ச்சியடைகின்ற ஒரு சந்தை

ஏலம்/கேட்டல் வீச்சு

ஏல விலைக்கும் கேட்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசம்

பெரிய உருப்படி

முகவர்கள் மற்றும்/அல்லது தரகர்களினால் உபயோகிக்கப்படுகின்ற ஒரு சொற்பதம். நாணய மாற்று வீதம் ஒன்றின் முதல் ஒரு சில இலக்கங்களை இது குறிக்கின்றது.

தரகர்

கட்டணம்/தரகுப்பண அறவீட்டுடன் கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றுபடுத்தும் ஒரு நபர்/நிறுவனம்.

விலையேறும் சந்தை

விலைகள் அதிகரித்துச் செல்லும் ஒரு சந்தை.

தீர்வையாக்குதல்

வர்த்தக நடவடிக்கையொன்றை முடித்து வைக்கும் நடைமுறையை குறிக்கும் ஒரு சொல்.

தரகு

தரகரால்/முகவரால் அறவிடப்படும் கட்டணம்.

உறுதிப்படுத்தல்

கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையொன்றின் விதிமுறைகளைக் குறிப்பிடும் ஒரு ஆவணம்.

ஒப்பந்தம்

வர்த்தகத்தின் வழமையான அலகு.

குறுக்கு வீதம்

இரு வெளிநாட்டு நாணங்களுக்கு இடையிலான நாணய மாற்று வீதம் அவை விலை ஒப்பீடு செய்யப்படும் நாட்டின் நாணயம் அல்லாது இருக்கும் சந்தர்ப்பம். உதாரணத்திற்கு அமெரிக்காவில் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்/ஜப்பானிய யென் ஆகியனவற்றின் மாற்றுவீதமானது குறுக்கு வீதம் எனப்படுகின்றது. இதே விலை ஒப்பீடானது ஐக்கிய இராச்சியம் அல்லது ஜப்பானில் இடம்பெறும் போது அது குறுக்கு வீதமாக அமையாது.

கூப்பன்

வட்டி வருமதி மற்றும் அது மேற்கொள்ளப்படவுள்ள திகதி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு பிணை முறியின் அம்சமாகும்.

நாணயம்

பரிமாற்றம் செய்து கொள்ளும் அலகு. ஒரு அரசாங்கத்தால்/மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட்டுள்ள நாணயத்தின் எந்த வடிவத்தையும் குறிக்கும். பரிமாற்றம் செய்து கொள்ளும் மார்க்கமாக நாணயங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அதாவது வாணிபங்களுக்கான அடிப்படையாக அவை உபயோகிக்கப்படுகின்றன.

வர்த்தக தினம்

அதே தினத்திலேயே ஸ்தானங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மூடப்படும் வர்த்தகங்கள்

வணிகர்

வேறு வணிகர் ஒருவருடன் வாணிபத்தை முன்னெடுத்து ஒரு தரப்பின் ஸ்தானத்தை முடிவுறுத்தி இலாப நோக்கத்துடன் செயற்படுகின்ற ஒரு நபர்/நிறுவனம்.

பெறுமானத் தேய்வு

நாணயத்தின் பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சி.

தள்ளுபடி

பிணையம் ஒன்றின் நிகர பெறுமானம் அதன் கொள்வனவு விலையையும் கடக்கும் தொகை.

தள்ளுபடி வீதம்

திறைசேரி உண்டியல்கள் முதிர்வுக் காலத்தை எட்டும் வரை வருடாந்த அடிப்படையில் அவற்றின் இலாப வீதம். தள்ளுபடி வீதமானது சதவீதத்தில் வெளிப்படுத்தப்படுவதுடன், 360 தினங்களைக் கொண்ட ஆண்டின் அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றது. Treasury bills

வெளிநாட்டு நாணயமாற்று

ஒரு நாணயத்தை கொள்வனவு அல்லது விற்பனை செய்யும் அதேசமயம், மற்றுமொரு நாணயத்தை கொள்வனவு அல்ல விற்பனை செய்தல்.

முன்னோக்கு

எதிர்காலத்தில் வரவுள்ள திகதியில் மேற்கொள்ளப்படவுள்ள கொடுக்கல்வாங்கல் நடவடிக்கை ஒன்றுக்கு முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மாற்று வீதம்.

அடிப்படை ஆய்வு

எதிர்கால சந்தை நகர்வுகளை தீர்மானிப்பதற்காக பொருளாதார மற்றும் அரசியல் தகவல் விபரங்களை ஆய்வு செய்தல்.

பணவீக்கம்

பொருட்களின் விலைகள் ஏறும் ஒரு பொருளாதார நிலைமையில், நுகர்வோரின் கொள்வனவு வலு குறைவடைதல்.

ஆபத்து

இழப்பு ஏற்படும் வாய்ப்பு வெளிப்பாடு

நீட்டிப்பு

கொடுக்கல்வாங்கல் ஒன்றுக்கான தீர்வுக் கொடுப்பனவு மற்றொரு திகதிக்கு பிற்போடப்படும் நடைமுறை.

இரண்டாம் நிலைச் சந்தை

திறைசேரியால் முன்னரே வழங்கப்பட்ட பிணையங்கள் வாங்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்ற ஒரு நிதியியல் சந்தை.

குறுகிய நிலை

சந்தை விலைகள் குறைவடையும் போது பெறுமானம் அதிகரிக்கும் ஒரு நிலை

வீச்சு

நாணய ஜோடி ஒன்றில் கேட்ட விலைக்கும், வழங்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கின்றது.

இழப்புக்களை நிறுத்தும் கோரல்

குறிப்பிட்ட ஒரு விலையில் தானாகவே பணமாக்கப்படும் திறந்த ஸ்தானத்தைக் கொண்ட ஒரு கோரல். முதலீட்டாளரின் ஸ்தானத்திலிருந்து எதிர்த்திசையில் சந்தை நகர்வு இடம்பெறும் பட்சத்தில் இழப்பு ஏற்படும் வாய்ப்புக்களை இந்த இழப்புக்களை நிறுத்தும் கோரல் குறைவுபடுத்துகின்றது.

இடைமாற்று

குறிப்பிட்ட நாணயம் ஒன்றின் குறிப்பிட்ட தொகை முன்னோக்கிய நாணய மாற்று வீதத்தில் விற்பனை மற்றும் கொள்வனவு செய்யப்படல்.

தொழில்நுட்ப ஆய்வு

எதிர்கால சந்தை நகர்வுகளை எதிர்வுகூறுவதற்கு வரலாற்றுரீதியில் சந்தைப் போக்குகளின் ஆய்வு.

கொடுக்கல்வாங்கல் செலவு

கொள்வனவு அல்லது விற்பனை தொடர்பில் நிதியியல் ரீதியான கொடுக்கல்வாங்கலை மேற்கொள்ள ஏற்படும் செலவு

வருவாய்

கூப்பன் வட்டி வீதத்தை அதன் கொள்வனவு விலையால் வகுத்து கணிக்கப்படுகின்ற பிணை முறி மூலமான இலாபத்தின் வருடாந்த சதவீதம்

top