தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

பாதுகாப்பு குறிப்பு விபரங்கள்

பாதுகாப்பான இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவைக்கான குறிப்புக்கள்

எமது வாடிக்கையாளர்களின் நிதியியல் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் போன்ற தரவுப் பரிமாற்றங்களின் போது பாதுகாப்பான இலத்திரனியல் சூழலை உறுதி செய்வதற்கு மக்கள் வங்கி நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்து வருகின்றது. எனினும் உங்களது தனிப்பட்ட தகவல் விபரங்களைப் பெற்றுக்கொள்ள பிறர் எத்தனிப்பதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான படிமுறைகளை முன்னெடுக்குமாறு நாம் உங்களுக்கு பரிந்துரை செய்கின்றோம். நீங்கள் மோசடியால் பாதிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக மக்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.

  • உங்களுடைய தகவல் விபரங்கள் அல்லது உங்களுடைய கணக்குகளின் விபரங்களைக் கோருகின்ற எவ்விதமான இணைப்புக்கள் அல்லது மின்னஞ்சல்களிலுள்ள பகிரங்க இணைப்புக்களை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம். மக்கள் வங்கி ஒரு போதும் அத்தகையை கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. தவறுதலாக இணைப்பொன்றை கிளிக் செய்திருப்பின் உடனடியாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
  • உங்களுடைய டெப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் எப்போதும் தனிப்பட்ட அடையாள இலக்கத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும். அதை வேறு எவருக்கும் வெளிப்படுத்தாது, அவர்களால் அனுமானிக்க முடியாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • உங்களுடைய சாதனத்தை கவனிப்பாரின்றி அல்லது கைவிடப்படாது அல்லது பாதுகாப்பற்ற இடத்தில் வைத்துப் பேணப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். கண்காணிப்பு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து கொள்வதால் தேவைப்படும் பட்சத்தில் உங்களுடைய தரவு விபரங்களை கட்டுப்பாட்டு முறையில் நீங்கள் அழித்துக் கொள்ள உதவுவதால் அதனைக் கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
  • நீங்கள் உங்களுடைய வங்கிச்சேவை செயலியை அல்லது மொபைல் இணையத்தளத்தை உபயோகித்த பின்னர் எப்போதும் அவற்றிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்யவும். இச்சமயத்தில் செயலி அல்லது இணையப்பக்கத்தினை மூடுவது மட்டும் போதுமானதல்ல.
  • வங்கிச்சேவை அல்லது உங்களுடைய மின்னஞ்சல்களை ஆராய்வதற்கு பாதுகாப்பற்ற வை-ஃபை வலையமைப்புக்களை உபயோகிக்க வேண்டாம். 4ஜி அல்லது 3ஜி இணைய இணைப்பினை உபயோகிப்பது சிறந்தது.
  • மொபைல் வங்கிச்சேவை தொடர்பில் வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து, உங்களுடைய மற்றும் வங்கியின் பொறுப்புக்கள் முறையே எவையென்பதை நீங்கள் அறிந்துள்ளதை உறுதி செய்யுங்கள்.
  • பாதுகாப்பற்ற மார்க்கங்களை உபயோகித்து தனிப்பட்ட அல்லது கணக்கு விபரங்களை அனுப்பவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ வேண்டாம்.
  • பயனர் அடையாள இலக்கம் அல்லது கடவுச்சொல்லை ஏனைய நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • கணக்கில் எதிர்பாராத கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் உடனடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள்.
  • இணைய வங்கிச்சேவையை உபயோகிக்கும் போது கொடுக்கல்வாங்கல் தொடர்பான உசார்படுத்தல் செய்தி முறைமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
top