இலங்கையை வலுப்படுத்தி, வங்கியியலை நவீனமயமாக்கி, ஒன்றிணைந்து ஒரு பிரகாசமான
எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னேற்றத்தை நோக்கி இட்டுச்செல்கிறது.
மக்கள் வங்கியின் டிஜிட்டல் தீர்வுகளுடன் சீரான வங்கியியலின் எதிர்காலத்தை அனுபவியுங்கள்.
உடனடிப் பணப்பரிமாற்றங்கள், வலுவான பாதுகாப்பு மற்றும் 24/7 நிதிப்போக்குக் கட்டுப்பாடு
ஆகியவற்றை உங்கள் உள்ளங்கையிலிருந்தே பெற்று மகிழுங்கள்.
நிறுவன வங்கியியலானது உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆதரவளிக்கும் வகையில் வணிகக் கடன்கள், வர்த்தக நிதி மற்றும் கரைகடந்த வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பிரத்தியேக நிதித் தீர்வுகளை வழங்குகிறது.
திறைசேரி சேவைகள் உங்கள் நிதி மற்றும் முதலீட்டுத் தேவைகளை நிர்வகிக்க உதவும் வகையில் அன்னியச் செலாவணி, முதலீடு, பணச் சந்தை மற்றும் அரச பிணையங்கள் தொடர்பான தீர்வுகளை வழங்குகின்றன.
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமானது, போட்டியான அன்னியச் செலாவணிச் சேவைகளின் ஆதரவுடன், எமது நம்பகமான வலையமைப்பின் மூலம் உலகம் முழுவதிலும் பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உங்களுக்கு வழிவகுக்கிறது.
வணிகக் கடன்களாவன வணிகங்கள் தங்களின் நடைமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், நீண்டகால வளர்ச்சியை அடையவும் உதவும் வகையில் நெகிழ்வான நிதித் தீர்வுகளை வழங்குகின்றன.
பாதுகாப்பான மற்றும் தடையற்ற வங்கி அனுபவத்திற்காக மேம்பட்ட உயிரியல் அளவீட்டுச் சான்றளிப்புடன் உங்கள் கணக்கைப் பாதுகாத்திடுங்கள்.
எந்தவொரு உள்ளூர் வங்கிக்கும் எந்தவிதச் சிரமமுமின்றி உடனுக்குடன் நிதியை அனுப்புங்கள்.
எந்நேரத்திலும், எவ்விடத்திலும் கிடைக்கும் வசதியான உதவியுடன் உங்கள் அனைத்து வங்கித் தேவைகளுக்கும் உடனடி ஆதரவைப் பெறுங்கள்.
Get an instant estimate of your monthly loan payments.
ESTIMATED MONTHLY PAYMENT
*Indicative rates only. Terms and conditions apply.
உங்கள் தேவைகளுக்கான நெகிழ்வான நிதியளிப்புத் தீர்வுகள்
நிறுவன வங்கியியல் வணிகங்களுக்கு வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதரவை வழங்கும் பொருட்டு, ஏற்புடைய கடனுதவிகள், கடல் கடந்த வங்கிச்சேவை, வணிக நிதியளிப்பு மற்றும் வர்த்தக நிதியளிப்புத் தீர்வுகள் ஆகியவற்றை வழங்குகிறது.
எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடியவாறான நிதியளிப்புத் தீர்வுகளை வழங்குவதன் மூலமும், இலங்கையர்களை வலுப்படுத்துவதன் மூலமும், வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான ஏற்புடைய கடன் திட்டங்களுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
குறுகிய கால- பருவ கால பயிர்களை பயிரிடும் நுண் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளின் பணி மூலதனத் தேவைகளுக்கு குறைந்த செலவில் நிதியளிப்பதன் மூலம் அவர்களின் சமூக-பொருளாதார நிலைகளை உயர்த்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம் (NCRCS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.