1987 ஆம் ஆண்டு ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட திருமதி ரேணுகா ஜெயசிங்க அவர்கள், வங்கித்துறையில் 29 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் தனது சேவையின் போது கிளை முகாமையாளர், வலய சிரேஷ்ட முகாமையாளர், பிராந்திய முகாமையாளர் மற்றும் உதவிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் (கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி) மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (சில்லறை வங்கிச்சேவை) ஆகிய பதவி மட்டங்களில் கிளை வங்கிச்சேவைத் துறையில் கடமையாற்றியுள்ளார். தற்போது அவர் பிரதிப் பொது முகாமையாளராக (செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணயம்) கடமையாற்றி வருகின்றார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் முதலாம் வகுப்பு விசேட கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ள அவர், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் தொழில்ரீதியான வங்கித்துறை தகைமையையும் பெற்றுள்ளார். அவர் இலங்கை தொழில்சார் வங்கியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையம் ஆகியவற்றின் ஆயுட்கால அங்கத்தவராவார்.