- 1. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை எல்லா நேரங்களிலும் மக்கள் வங்கியின் ஆதனமாக இருத்தல் வேண்டும் என்பதுடன் வங்கியின் வேண்டுகோளின்போது நிபந்தனையின்றியும் உடனடியாகவும் வங்கிக்குத் திருப்பிக்கொடுக்கப்படுதலும் வேண்டும்.
- 2. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை எனது தனிப்பட்ட பாவனைக்கு மாத்திரமே. அது கைமாற்றப்படமுடியாதது. அது வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்குத் தவிர வேறு ஏதேனும் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படமுடியாது.
- 3. நான்/ நாம் எனது/எமது தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) கண்டிப்பாக அந்தரங்கமாக வைத்திருப்பேன்/போம். அத்துடன் அத்தகைய இலக்கத்தை எந்தவொரு நேரத்திலும் வேரொருவருக்கு வெளிப்படுத்தாதிருப்பதனையும் உறுதியளிக்கின்றேன்/கின்றோம். பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை தொடர்பில் ஆ.ஆ.இ. (PIN) என்பது வங்கியால் எனக்கு/ எமக்கு அந்தரங்கமாக உண்டுபண்ணப்பட்ட மூல ஆளுக்குரிய அடையாள இலக்கம் எனவும் என்னால்/ எம்மால் பயனுறுத்தப்பட்ட ஏதேனும் பதிலீடு எனவும் பொருள்கொள்ளப்படும்.
- 4. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அல்லது பயனுறுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் அவை எவ்வாறு பயனுறுத்தப்பட்டிருப்பினும் நான்/ நாம் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்/ றோம்.
- 5. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் PIN இலக்கத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மீளப்பெறுதலின் கைமாற்றற் கொடுப்பனவில் தொகையை எனது/எமது கணக்கில் பற்றுவைப்பதற்கு இத்தால் தங்களுக்கு அதிகாரமளிக்கின்றேன்/றோம்.
- 6. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை அல்லது ஏற்புடைத்தானவிடத்து வேறு ஏதேனும் உள்ளூர் வலையமைப்புக்கள் ஊடாக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான எல்லா அறவீடுகளையும் அத்துடன் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாடு தொடர்பில் சட்டக் கட்டணங்கள் அல்லது வேறு நியதிச் சட்ட அறிவீடுகள் எவையுமிருப்பின் அவை உட்பட வேறு எவையேனும் பொறுப்புகளையும் எனது/ எமது கணக்கில் பற்றுவைப்பதற்கு நான்/ நாம் இத்தால் தங்களுக்கு மேலும் அதிகாரமளிக்கின்றேன்/றோம்.
- 7. எனது/ எமது கணக்கு ஒரு கூட்டுக் கணக்காக இருப்பின் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாட்டினின்றெழும் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களுக்கு நான் நாம் ஒருமித்தும் தனித்தனியாகவும் பொறுப்புடையவராவேன்/வோம்.
- 8. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் மூலம் முறைவழிப்படுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல் வாங்கல்களையும் பற்றிய வங்கியின் பதிவேடுகளையும் கூற்றுக்களையும் எல்லா நோக்கங்களுக்காகவும் முடிவுகளுக்காகவும் என்னை/எம்மைப் பொறுப்பாக்கும் என்பதனை நான்/நாம் ஏற்றுக்கொள்கின்றேன்/றோம்.
- 9. என்னால்/எம்மால் பெறப்பட்ட பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை களவு போயின் அல்லது காணாமற்போயின் நான்/நாம் உடனடியாக வங்கிக்கு அறிவிப்பேன்/போம் என்பதுடன் வங்கிக்கு எழுத்திலான உறுதிப்படுத்துகையொன்றையும் வழங்குவேன்/வோம். காணாமற்போன, களவுபோன அல்லது எனது/எமது அதிகாரமின்றி பயன்படுத்தப்பட்ட பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாட்டால் ஏற்படும் ஏதேனும் இழப்பிற்கு நான்/நாம் வங்கியைப் பொறுப்பாளியாக்கமாட்டேன்/டோம்.
- 10. வங்கிக்கு அதன் ஏக தீர்மானத்தின்படி இந்த நியதி நிபந்தனைகளுள் எதனையும் ஏதேனும் நேரத்தில் எனக்கு/எமக்கு அறிவித்தலுடனோ அறிவித்தலின்றியோ திருத்துவதற்கான, குறைநிரப்பு செய்வதற்கான அல்லது வேறுபடுத்துவதற்கான உரித்துடையதாதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய திருத்தம், குறைநிரப்புதல் அல்லது வேறுபடுத்துகை என்னை/ எம்மைப் பொறுப்பாக்கும்.
- 11. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை அப்போதைக்கு வலுவிலுள்ள விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையால் வழங்கப்படும் எல்லாச் சேவைகளையும் வசதிகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் அல்லது வேறுவகையில் பின்வருவனவற்றை ஆளுகை செய்யும் எவையேனும் நியதி நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.
மிகுதி பற்றிய விசாரணை
PIN மாற்றம்
பணம் மீளப்பெறுதல்
POS ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்தல்
- 12. எனக்கு/எமக்கு எதேனும் முன்னறிவித்தலின்றி அல்லது எவையேனும் காரணங்கள் காட்டாமல் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையை ரத்துச்செய்வதற்கான, மீளப்பெறுவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான முழு உரிமையும் வங்கிக்கு இருத்தல் வேண்டும். நான்/நாம் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பாவனையை முடிவுறுத்தத் தீர்மானிக்கும்பட்சத்தில் நான்/நாம் வங்கிக்கு 7 நாட்களுக்குக் குறையாத எழுத்திலான முன்னறிவித்தல் கொடுத்து பீபள்ஸ் வீசா அட்டையைத் திருப்பிக்கொடுக்க உடன்படுகிறேன்/றோம்.
- 13. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் எல்லா மாற்றீடுகளும் புதுப்பித்தல்களும் வலுவிலுள்ள நியதி நிபந்தனைகளுக்கு அமைந்தனவாதல் வேண்டும்.
- 14. எத்தன்மையதுமான ஏதேனும் காரணங்களுக்காக அட்டை செல்லுபடியற்றதாக்கப்பட்டமைக்கு வங்கி பொறுப்பாளியாகமாட்டாது.
- 15. மீளப்பெறுதலை அல்லது கைமாற்றத்தை ஈடுசெய்வதற்கு எனது/எமது கணக்கில் போதியளவு பணம் இருந்தாலன்றி நான்/நாம் ஏதேனும் நேரத்தில் அட்டையைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த எத்தனிக்கவோ மாட்டேன்/டோம்.
- 16. ATM திரையில் அல்லது அச்சிடப்பட்ட விசாரணைச்சிட்டையில் அல்லது பற்றுச்சீட்டுப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட தொகை எத்தன்மையதான ஏதேனும் நோக்கத்திற்கு வங்கியுடனான எனது/எமது கணக்கின் முடிவான நிலைமையாகமாட்டாது என்பதனை நான்/நாம் ஒப்புறுதி செய்கின்றேன்/றோம்.
- 17. அட்டையின் அல்லது ATM பொறியின் ஏதேனும் பிறழ்வுச் செயற்பாட்டினால் அல்லது செயலிழப்பினால் அல்லது ATM பொறியில் பணம் போதாமையால் ஏற்படும் எத்தன்மையதுமான ஏதேனும் இழப்பிற்கு அல்லது சேதத்திற்கு நான்/நாம் வங்கியை ஆளாக்கவோ பொறுப்பாளியாக்கவோ அல்லது கணக்குக்காட்டும் பொறுப்பிற்கு உட்படுத்தவோ மாட்டேன்/மாட்டோம்.
- 18. நடைமுறை, சேமிப்பு அல்லது வேறு ஏதேனும் கணக்கை ஆளுகை செய்யும் எல்லா விதிகளும் ஒழுங்குவிதிகளும் அத்தகைய கணக்குகள் தொடர்பிலான அட்டைக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடயனவாதல் வேண்டும்.
- 19. நான்/நாம் பீபள்ஸ் வீசா கடனட்டையை வெளிநாடொன்றில் உபயோகிக்கும்போது, வங்கியினால் வழங்கப்பட்டுள்ள கடன் எல்லைக்குட்பட்ட தொகைக்கு மாத்திரமே கொள்வனவு செய்வதென்பதை உறுதிப்படுத்துவதோடு, பிரயாணச்செலவு, ஹோட்டல் செலவு, கூடுதலாக ஏற்பட்டசெலவு, வைத்திய செலவு மற்றும் தனிப்பட்ட பாவனைக்காக பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு போன்றவற்றிற்கு மாத்திரம் வெளிநாடுகளில் கடனட்டையை உபயோகப்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றேன்/ உறுதிப்படுத்துகின்றோம். பாரிய அளவிலான பணக்கொடுக்கல் வாங்கல்கள், வியாபார நோக்குடனான கொள்வனவுகள் மற்றும் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றிற்காக நான்/ நாம் கடனட்டையை உபயோகிக்க மாட்டேன்/ மாட்டோம். மேலும் எனக்காக/ எமக்காக அல்லது மூன்றாவது கட்சிக்காரருக்காக கடனட்டையை உபயோகித்து வியாபார அளவில் பொருட்களைக் கொள்வனவு செய்ய அல்லது இலங்கைக்கு அப்பால் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள/ மூலதன மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன்/ மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்/ படுத்துகின்றோம்.
- 20. இலத்திரனியல் பணமாற்ற அட்டைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மற்றும் வெளியிடப்படவுள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நான்/ நாம் இணக்கம் தெரிவிக்கின்றேன்/ தெரிவிக்கின்றோம்.
- 21. இவ் அட்டை காணாமல் போகுமிடத்தும் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் சர்ச்சைகள் சம்பந்தமாக எழும் கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை வங்கியினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கப்படும் வீதங்களின் படி செலுத்துவதற்கு சம்மதிக்கின்றேன்/ சம்மதிக்கின்றோம்.
- 22. நான்/ நாம் வெளிநாட்டில் அட்டையைப் பாவிக்க எண்ணுவதாயின் அது பற்றி வங்கிக்கு நாட்டை விட்டு வெளியேற முன்பதாக வங்கிக்கு அறிவிக்க சம்மதிக்கின்றேன்/ றோம்.
இப் பிரகடனம் இலங்கை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்படுகின்றது.
....................................................................................................... அடிப்படை அட்டை உரிமையாளர்/ மேலதிக அட்டை உரிமையாளர்................................................................................................... ஆகிய நான்/ நாம் இப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் இத்தால் பிரகடனப்படுத்துகிறேன்/ கிறோம். செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2005 செப்டம்பர் 19ஆம் திகதியிட்ட 1411/5 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அந் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கலுக்கு அட்டையைப் பயன்படுத்த முடியும் என்பதை விளங்கிக் கொண்டோம் என்பதை நான்/ நாம் இத்தால் உறுதிப்படுத்துகிறேன்/கிறோம். அத்துடன் அந் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக மேலும் உடன்படுகிறேன்/ கிறோம். எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி நான்/ நாம் மேற்கொள்கின்ற அந்நிய செலாவணி பரிமாற்றல் தொடர்பாக செலாவணி சட்டங்களின் நோக்கங்களின் பொருட்டு மற்றும் மக்கள் வங்கிக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக எந்தவொரு தகவலையும் வழங்க கட்டுப்படுவதாக மேலும் இத்தால் உடன்படுகிறேன்/ கிறோம். நான்/ நாம் வெளிநாட்டு தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அல்லது குடியகல்வதற்கு முன்னர் எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையை/ அட்டைகளை மக்கள் வங்கியிடம் ஒப்படைப்பதற்கு உடன்படுவதாக நான்/ நாம் மேலும் இத்தால் உடன்படுகிறேன்/ கிறோம். எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி அனுமதிக்கப்படாத அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதாக சந்தேகிப்பதற்கு போதுமானளவு காரணிகள் இருப்பதாக தெரியவருமானால் அந்த இலத்திரனியல் பணமாற்ற அட்டை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்நிய செலாவணியை அதிகாரம் பெற்ற முகவரி (வங்கி) இடைநிறுத்த முடியும் என்பதை நான்/நாம் அறிவேன்/வோம்.
................... ............................................
அடிப்படை அட்டை உரிமையாளரின் கையொப்பம் திகதி
................... ............................................
மேலதிக அட்டை உரிமையாளரின் கையொப்பம் திகதி
நான் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் என்றவகையில் விண்ணப்பதாரர்/ விண்ணப்பதாரர்கள் வழங்கியுள்ள தகவல்களையும் அதனோடு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் மிகக் கவனமாகப் பரிசீலித்தேன். அத் தககவல்களும் ஆவணங்களும் சரியென்பதை உறுதிசெய்கின்றேன். இலத்திரனியல் பணமாற்ற அட்டை உரிமையாளர்கள் அவர்களுடைய அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கவனமாக இருப்பேன் என உறுதிசெய்கிறேன். அத்துடன் அட்டை உhpமையாளர்/அட்டை உரிமையாளர்கள் வழங்குகின்ற வாக்குறுதியை மீறி இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி அதன்மூலம் அனுமதிக்கப்படாத அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகின்றது என சந்தேகிப்பதற்குப் போதுமானளவு காரணிகள் இருப்பதாக தெரியவருமானால் அந்த இலத்திரனியல் பணமாற்ற அட்டை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்நிய செலாவணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் அத்தகைய மீறல் தொடர்பான விடயத்தை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
.............. .......................................................
திகதி அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரின் கையொப்பம்