நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தினை இலங்கையில் உள்ள அன்பிற்குரியவர்களுக்கு கடல் கடந்து அனுப்பி வைக்கும் சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது மக்கள் வங்கி.
உங்கள் பணப்பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்கள் வங்கி பின்வரும் வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகிறது.
People’s Bank has introduced an over-the-counter cash payment method, called “CASHPICKUP”(B2B) for non-account holders, where they can obtain cash at any People’s Bank Branch on producing a valid identity card and the Reference (PIN number). The PIN Number will be the Transaction Reference Number of the Remitting Bank/Exchange Company which may differ from one to another and will consist of any number of digits with alpha numeric characters.
அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து ஒரு சில நிமிடங்களுக்குள் இலங்கைக்கு பணத்தை அனுப்பிவைப்பதற்கு உதவும் வகையில் இணையத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வங்கியின் ஒரு உற்பத்தியே ‘People’s e-Remittance’ சேவை. விரைவான மற்றும் சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைமைகளை தன்னியக்கமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
மக்கள் வங்கியின் முகவர்களினூடாக வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு People’s e Remittance இடமளிக்கின்றது. தற்சமயம் பின்வரும் மக்கள் வங்கி முகவர்களினூடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது. People's e-Remittance சேவை முகவர்களின் பட்டியல்
பாதுகாப்பான ஒரு இணையத்தளத்தின் மூலமாக செலவு குறைந்த, சிரமங்களின்றிய தரவு மாற்றத்துடன் கூடிய ஒரு வழியாக இணையத்தின் பாவனையை People’s e-Remittance ஊக்குவிக்கின்றது. பாவனைக்கு இலகுவான முன்முக முறைமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியன அனுப்புகின்ற பணத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறைப்படுத்தும் நேரத்தைக் குறைப்பதுடன், திறனை கணிசமான அளவில் அதிகரிக்கச் செய்கின்றது.