- கால எல்லைக் கடன்கள்
வர்த்தகம், விவசாயம், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எந்தவொரு வியாபார நோக்கத்திற்காகவும் குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நெகிழ்வுப்போக்கு மற்றும் சௌகரியம் கொண்ட கொடுப்பனவுத் திட்டங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
- மேலதிகப் பற்றுக்கள்
நடைமுறைக்கணக்கின் மீதி பூச்சியத்தை எட்டும் போது ஒரு கடன் நீடிப்பு வசதியாக இது வழங்கப்படுகின்றது. கணக்கில் போதுமான நிதி இல்லாத போதும் தற்காலிக அல்லது நிரந்தர ஏற்பாடாக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தொகை எல்லை வரை பணத்தை பெறுவதற்கு மேலதிகப் பற்று இடமளிக்கின்றது.
- வங்கி உத்தரவாதங்கள்
வேறுபட்ட வணிகத் துறை தேவைப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு தேவைகளுக்கு மூன்றாம் தரப்பின் பேரில் வாடிக்கையாளர்கள் வழங்குவதற்கான பொதுவான உத்தரவாதப் பத்திரங்கள், ஏலப் பிணைகள், செயல்திறன் பிணைகள், முற்பணக் கொடுப்பனவுப் பிணைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
- முறிகள் மாற்று சேவை
உடனடி கடனை வழங்குவதன் மூலமாக வாடிக்கையாளார்களின் தொழிற்படு மூலதனப் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்வதற்கு முறிகளை அவற்றின் முதிர்வு காலத்திற்கு முன்பதாகவே மாற்றம் செய்யும் சேவை.
- பண-பிணை வசதிகள்
சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றில் உள்ள பண மீதிகளுக்கு எதிராக வணிக நோக்கங்களுக்காக நிலையான கடன் தவணைக் கொடுப்பனவுகள் அல்லது முடிந்த போது செலுத்தக்கூடிய வசதிகளை நாம் கருத்தில் கொள்கின்றோம்.