- உங்களுடைய பிரவுசரை புதுப்பித்துக் கொள்ளவும்
இணையத்தள மோசடியின் பாதிப்பிற்கு ஆளாகுவதைத் தவிர்ப்பதற்கு உங்களுடைய பிரவுசரை புதுப்பித்துக் கொள்வது அத்தியாவசியமாகும். தாக்குதல்காரர்கள் உங்களது தகவல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை இது கடினமாக்கும். மேலும்
- உங்களுடைய தனிப்பட்ட அடையாள இலக்கங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்களுடைய தனிப்பட்ட அடையாள இலக்கம் தொடர்பில் மின்னஞ்சல், தொலைபேசி அல்லது இணையத்தள வாயிலாக உங்களது வங்கி ஒரு போதும் கோரிக்கை விடுக்காது. உங்களுடைய தனிப்பட்ட அடையாள இலக்கத்தை வெளிப்படுத்துமாறு நீங்கள் கோரப்பட்டால், மோசடிக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள ஒருவராக நீங்கள் இருக்க முடியும். உங்களுடைய தனிப்பட்ட அடையாள இலக்கத்தை எவருக்கு வழங்காதிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- இணைப்புக்களை திறக்கும் போது அவதானமாக இருங்கள்
மின்னஞ்சல் இணைப்பொன்றை திறப்பது தேவைப்பட்டால் அதனை அனுப்பியவர் உங்களுக்கு அறிமுகமானவர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அழிவுகளை உண்டாக்கும் பல வைரஸ்கள் இணைப்புக்கள் ஊடாகவே பரப்பப்படுகின்றன. அனுப்பியவர் உங்களுக்கு அறிமுகமானவராக இருக்கும் பட்சத்தில் கூட கோப்பில் என்ன உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பது சிறந்ததென அறிவுறுத்தப்படுகின்றது. ஆதலால், அனுப்பியவர் உங்களுக்கு அறிமுகமாக இருக்கும் பட்சத்தில் கூட அவதானத்துடன் செயற்படுங்கள்.
- உங்களுடைய வங்கிக் கூற்றுக்களை ஆராயுங்கள்
உங்களுடைய வரவு அறிக்கை ஒன்றுக்கு பல தடவைகள் உன்னிப்பாக ஆராய்வதை உறுதிப்படுத்தக் கொள்ளுங்கள். அங்கீகரிக்கப்படாத கணக்குகள், கடன்கள் அல்லது கொள்வனவுகள் உள்ளனவா என்பதை ஆராயுங்கள். அவை உங்களது வரவு மீதிக்கு கேடு விளைவிப்பதுடன், உங்களுடைய தகவல் விபரங்கள் களவாடப்பட்டுள்ளமைக்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுடைய அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளதாக நீங்கள் கண்டறியும் பட்சத்தில், அந்த முரண்பாடு தொடர்பில் கடன் பணியகத்தை இணையத்தளத்தின் மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டு நீங்கள் உங்களது மறுப்பினை தெரிவிக்க முடியும்.
- வலுவான கடவுச்சொற்களைப் பேணுங்கள்
உங்கள் உபயோகிக்கும் அனைத்துச் சேவைகளுக்கும் வலுவான கடவுச்சொல்லை நீங்கள் தெரிவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுச்சொல் ஒன்றைத் தெரிவு செய்யும் போது பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் மற்றும் இலக்கங்கள் அடங்கலாக குறைந்தபட்சம் 8 எழுத்துக்களை உபயோகியுங்கள். தாக்குதல்காரர்கள் அனுமானிக்கும் வகையில் ஆர்வங்கள் அல்லது பெயர்களை உபயோகிக்க வேண்டாம். குறிப்பாக நீங்கள் சமூக ஊடகத்தில் பதிவு செய்யும் போது உங்களுடைய பிறந்த தினம் செல்லப் பிராணியின் பெயர் அல்லது உங்களுடைய பெயர் ஆகியவற்றை உபயோகிக்காது வலுவான கடவுச்சொல் ஒன்றை பயன்படுத்தல் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய கடவுச்சொல்லுக்கு பங்கம் நேர்ந்துள்ளதாக நீங்கள் எண்ணும் பட்சத்தில், உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளவும்.
- பாதுகாப்பான இணைப்பினை உபயோகிக்கவும்
நீங்கள் அடிக்கடி இணையத்தளத்தின் மூலமாக பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்பவராக இருப்பின், இணையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைக்கும் இணையத்தின் மூலமாக உங்களது கணக்கு விபரங்களை பரிமாற்றம் செய்வது தேவைப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் இணையத்தளத்தின் மூலமாகப் பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்யும் போது கம்பியில்லா இணைப்பினை உபயோகிக்கும் சமயத்தில் பாதுகாப்பற்ற வை-ஃபை இணைப்புக்களில் ஹொட்ஸ்பொட் மூலமாக தாக்குதல்காரர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உபயோகிக்கின்ற இணையத்தளங்களின் அனைத்துப் பக்கங்களும் https:// இற்குப் பதிலாக https:// என ஆரம்பிக்கும் பக்கங்களை தெரிவு செய்வதன் மூலமாக WEP key மேலதிக பாதுகாப்பை வழங்குதல் அல்லது வலுவான கடவுச்சொல் தேவைப்பாடு மூலமாக அதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.