இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் சக அங்கத்தவரான திரு. பொன்சேகா அவர்கள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு கற்கை நிலையத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். ACI வர்த்தக சான்றிதழில் சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ள அவர் திறைசேரி முகாமைத்துவத் துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், அவுஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் சான்று அங்கீகாரம் பெற்ற அங்கத்தவரும் ஆவார். 2002 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், அதற்கு முன்பதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.