திரு. அஹமட் அவர்கள் 2017 ஜனவரி 3 ஆம் திகதியன்று மக்கள் வங்கியில் இணைந்துள்ளார். மூலோபாய நிதியியல் முகாமைத்துவம், மாற்று முதலீடுகள் மற்றும் தொழிற்துறை ஆபத்து போன்ற துறைகளில் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். சந்தையில் முறையே பாரிய பல்தேசிய தொழில்சார் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய வகை 1 சேவை வழங்குனர்கள் போன்ற சில பிரபலமான தொழில்தருநர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார். பிணையங்கள் மற்றும் முதலீடுகள் பட்டய கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்), பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்), சான்று அங்கீகாரம் பெற்ற பட்டயக் கணக்காளர்கள் சங்கம் (ஐக்கிய இராச்சியம்), சான்று அங்கீகாரம் பெற்ற செயல்பாட்டு கணக்காளர்கள் (அவுஸ்திரேலியா), ஆபத்து முகாமைத்துவக் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் பட்டயக் கடன் முகாமைத்துவக் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியவற்றின் அங்கத்தவராகவும் உள்ளார்.