இசுரு உதான
இசுரு உதானா என்பது குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்காகும், இது பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.100/- உடன் கணக்கைத் திறக்க முடியும். குழந்தை பிறந்தது முதல் பாலர் பள்ளிக்குச் செல்லும் வயது வரையிலான குழந்தைகளுக்கான கணக்கைத் திறப்பதற்கான ஆரம்ப வைப்புத்தொகையை வங்கி டெபாசிட் செய்யும், ஏற்கனவே பாலர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ரூ.250/-.
இந்தக் கணக்கின் தனித்துவமான அம்சங்கள் "இசுரு உதான" பரிசு வவுச்சர் மற்றும் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி மதிப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசு வவுச்சர்களை எந்த மக்கள் வங்கிக் கிளையிலும் கவுண்டரில் வாங்கலாம், ரூ.200, ரூ.500, ரூ.2,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 ஆகிய மதிப்புகளில் நீங்கள் இசுரு உதான கணக்கைத் திறக்கலாம். அல்லது வவுச்சரை ஏற்கனவே இருக்கும் இசுரு உதான கணக்கில் வரவு வைக்கலாம்.
உங்கள் பிள்ளை 6 வயதை அடையும் போது இசுரு உதான சேமிப்புக் கணக்கு தானாகவே சிசு உதான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும்.
- அம்சங்கள்
- தகுதி
- விஷேட நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
இசுறு உதான கணக்கானது பெற்றோரினாலோ பாதுகாவலளாரினாலோ ஆரம்பிக்கக் கூடியதாக இருத்தல்
சாதாரண சேமிப்புக் கணக்குளை விட 1% கூடிய வட்டி
இசுறு உதான கணக்கின் சிறப்பம்சமான அன்பளிப்புக் கூப்பன்கள்
கணக்கு அம்சங்கள்
- பரிசு வவுச்சர்கள் உட்பட குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி மதிப்பு பரிசுகள்
விஷேட நன்மைகள்
- கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள்
- நாளாந்த மீதிகளின் மீது வட்டி கணிப்பீடு
- கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.100/- இனையும் ஏற்கனவே முன்பள்ளி செல்லும் சிறாருக்கு முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.250/- இனை வங்கியே வைப்பு செய்தலும்
சிசு உதானா
சிசு உதான 6 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறுவர் சேமிப்புக் கணக்கு. சிறுவர்களின் திறமைக ஊக்குவித்து சேமிப்பு பழக்கத்தினை வளர்ப்பதன் மூலமாக சிசு உதான சேமிப்புக் கணக்கு பிரகாசமான எதிர்காலத்தினை சிறுவர்களிக்கு வழங்குகின்றது.
மேலும் நாடெங்கிலும் அநேகமான பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசு உதான சேமிப்பு அலகில் சிறுவர்கள் தாமாகவே வங்கிச்சேவை நடவடிக்கைகளை முன்னெடுத்து நடாத்துவதன் மூலம் சிறு வயதிலேயே வங்கிச்சேவை அனுபவத்தினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர்.
சிசு உதான கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.250/- இனை வங்கியே வைப்பு செய்தல்.
• கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில்;> க.பொ.த. சா/த உ/த பரீட்சைகளில் சித்தி எய்தும் சிறுவர்களுக்கு விசேட பணப்பரிசில்கள்
• சிறுவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் சிசு உதான சேமிப்பு அலகு இருக்கும் பட்சத்தில் அதிலேயே கணக்கொன்றினை ஆரம்பிக்கும் வசதி
• சிறுவர்கள் 18 வயதினை எட்டும்போது சிசு உதான சேமிப்புக் கணக்கானது “YES” சேமிப்புக் கணக்காக சுயமாகவே மாற்றம் செய்யப்படும்.
சிசு உதான கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் சிறுவர்களின் பெயரில் கணக்கொன்றினை பெற்றோரினாலோ அல்லது பாதுகாவலரினாலோ இலகுவாக ஆரம்பிக்க முடியும்.சிசு உதான கணக்கு ஆரம்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்
சிறுவர்களின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
- அம்சங்கள்
- தகுதி
- விஷேட நன்மைகள்
- முக்கிய தகவல் ஆவணம்
- எங்களை தொடர்பு கொள்ள
கணக்கு அம்சங்கள்
சாதாரண சேமிப்புக் கணக்குளை விட 1% கூடிய வட்டி
இலவச புலமைப்பரிசில் கருத்தரங்குகள்
கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள்
கணக்கு அம்சங்கள்
- 6-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
விஷேட நன்மைகள்
- கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.250/- இனை வங்கியே வைப்பு செய்தல்.
- கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் க.பொ.த. சா/த உ/த பரீட்சைகளில் சித்தி எய்தும் சிறுவர்களுக்கு விசேட பணப்பரிசில்கள்
- சிறுவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் சிசு உதான சேமிப்புப் அலகு இருக்கும் பட்சத்தில் அதிலேயே கணக்கொன்றினை ஆரம்பிக்கும் வசதி