உட்திரும்பல் முதலீட்டுக் கணக்குகளைத் (IIA) திறப்பதற்குத் தகவுடைய ஆட்கள்
தகுதி
- இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாத ஒருவர்
- இலங்கைக்கு வெளியே வதிகின்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாட்டினத்தவர் அல்லாத ஒருவர்
- இலங்கைக்கு வெளியே வதிகின்ற இலங்கைப் பிரசை ஒருவர்
- இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட கம்பெனியொன்று
- இலங்கைக்கு வெளியே தாபிக்கப்படுகின்ற நாட்டு மற்றும் பிராந்திய நிதியங்களும் பரஸ்பர நிதியங்களும் கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களும் மற்றும் வேறு நிறுவனஞ்சார் முதலீட்டாளர்களும்
- ஓர் இறந்த ஆளினது மரணச்சொத்தினது நிருவாகம் பூர்த்திசெய்யப்படும்வரை அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றைப் (IIA) பேணி வந்த அத்தகைய இறந்த ஆளின் நிருவாகி அல்லது நிறைவேற்றுநர்
- வழக்கு நடவடிக்கைகள் முடிவுறும்வரை அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றைப் பேணிய கம்பெனியொன்றின் பெறுநர் அல்லது ஒழிப்போன் ஒருவர்
- காலத்திற்குக்காலம் மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்படக்கூடிய வேறெவரேனும் ஆள் அல்லது வகுதியினரான ஆட்கள்
விஷேட நன்மைகள்
- உள்வரும் பணப்பரிமாற்றங்கள் கட்டணங்களின்றி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
- உங்களுடைய முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு
பெற்றுக்கொள்ள வேண்டிய பத்திரங்களும் தகவல்களும்
- தனி ஆட்களுக்காக, கணக்குத் திறக்கும் விண்ணப்ப படிவம், செல்;லுபடியான கடவுச்சீட்டின் போட்டோ பிரதி (விண்ணப்பதாரரின் விபரம்;;, வீசா மற்றும் திருத்தங்களுக்கு உரிய புறக்குறிப்பிடல்கள் என்பவற்றைக் காட்டுகின்ற பக்கம்), KYC படிவம், FATCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்கு வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்) மற்றும் வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்.
- இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட கூட்டுத்தாபன நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனஞ்சார் முதலீட்டாளர்கள் உட்பட ஏனைய தகவுடைய ஆட்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில், ஏற்புடையதானவாறு மென்டேட்(பணிப்பாணை) பத்திரங்கள், மற்றும் வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்.
- கணக்கு வைத்திருப்பவர்களின் தகவுகளை உறுதிப்படுத்துகின்ற அவர்களுக்கு உரியஏனைய தகவல்களும் ஆவணப்படுத்தப்பட்ட சாட்சியங்களும்.
- நேருக்குநேர் சந்திக்காத வாடிக்கையாளர் ஒருவர் தொடர்பில் கையொப்பத்தை மெய்யுறுதிப்படுத்துவதை மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுவதை, பின்வரும் நடவடிக்கைமுறைகளில் ஒரு முறையைப் பின்பற்றி செய்ய முடியும்.
- முகவர் வங்கியொன்றிலிருந்த சான்றாதாரமொன்றைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம்.
- அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரம பெற்ற தூதுவ உத்தியோகத்தரால் சான்றுப்டுத்தப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசி அல்லது சம்பந்தப்பட்ட பத்திரங்கள்.
-
அனுமதிக்கப்பட்ட வரவுகள்
-
அனுமதிக்கப்பட்ட பற்றுகள்
- வங்கித்தொழில் முறைமையினூடாகக் கணக்கு வைத்திருப்பவரின் சார்பில் இலங்கைக்கு வெளியேயிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு செலாவணியிலான அனுப்புதொகைகள்
- அதே கணக்கு வைத்திருப்பவரின் அல்லது வேறெவரேனும் ஆளின் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PPFCA) உட்திரும்பல் முதலீட்டுக் கணக்குகள் (IIA) அல்லது கரைகடந்த வங்கித் தொழிற்கூறில் பேணப்பட்ட கணக்குகள் என்பவற்றிலிருந்தான கைமாற்றல்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அனுமதிக்கப்பட்டவாறாக இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆட்களினால் இலங்கையில் பொறுப்பேற்கப்பட்ட மூலதனக் கொடுக்கல்வாங்கல் களிலிருந்து பெறப்பட்ட பங்கிலாபங்கள், விற்பனை அல்லது முதிர்ச்சி வரும்படிகள், ஒழித்துக்கட்டுதலின் கையுதிர்ப்பு, மூலதன மீட்பு, பங்கு மீள் வாங்குகை, இலாபங்கள், மேன்மிகை நிதிகள், வாடகை வருமானம், முதலை அறவிடுதல், வட்டி அல்லது வேறு தொடர்புபட்ட வருமானம்;
- வெளிப்படுத்துகையின்மேல் கணக்கு வைததிருப்பவரினால் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயம் (அதாவது, அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெநா டொலரை அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதை விஞ்சுகின்றவிடத்து அல்லது அதற்குச் சமமாகவிருக்குமிடத்து சுங்கத்திணைக்களத்துக்கான வெளிப்படுத்துகை ஒன்றின்மீது அல்லது அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெநா டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதற்குக் குறைவாகவிருக்குமிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட வியாபரிகளின்; வெளிப்படுத்துகை ஒன்றின்மீது)
- அத்தகைய மூல முதலீடு உட்திரும்பல் மூதலீட்டுக் கணக்கினூடாகச்( IIA) செய்யப்பட்டுள்ளவிடத்து (அல்லது கணக்கு வைத்திருப்பவரின் மீளப்பெயர் குறிக்கப்பட்ட பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின் (SIA) ஊடாக அல்லது இவ்வொழுங்குவிதிகள் வலுவுக்கு வருவதற்கு முன்னர் உட்திரும்பல் அனுப்புதல்களின் எண்பிப்பை நிச்சயிப்பதன்மேல்) இலங்கை ரூபாவில் பெறப்பட்ட மூலதன ஈட்டுகைகள், குத்தகைபற்று உரிமைகள், துணைக் குத்தகைப் பற்று உரிமைகள் எவையேனுமிருப்பின் அவையுட்பட அசைவற்ற ஆதனங்களின் விற்பனை வரும்படிகள்
- நீக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அளிக்கப்பட்ட பொதுவான அல்லது விசேடமான அங்கீகாரம் ஒன்றின் கீழ் கணக்குவைத்திருப்பவரிடமிருந்து (வெளிநாட்டுக் கடன்தருநர்) அத்தகைய ஆளினால் (கடன்பெறுநர்) பெறப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன்களின் மீள்க்கொடுப்பனவாக இலங்கையில் வதிவுள்ள ஒருவரின் வியாபார வெளிநாட்டு நாணயக் (BFCA) கணக்கிலிருந்தான கைமாற்றுதல்கள்
- ( நீக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பொதுவான அல்லது விசேடமான அங்கீகாரத்தின்; கீழ் கணக்குவைத்திருப்பவரிடமிருந்து (வெளிநாட்டுக் கடன்தருநர்) பெறப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன்களின் மீள்கொடுப்பனவுக்கென இலங்கையில் வதிவுள்ள ஒருவரினால் (கடன்பெறுநர்) வெளிநாட்டு நாணயத்திற்கு மாற்றப்பட்ட இலங்கை ரூபாய்கள்
- அதே அதே கணக்கு வைத்திருப்பவரின் தூதுவ வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (DFA) மற்றும் தூதுவ ரூபாக் கணக்குகளிலிருந்தான (DRA) கைமாற்றுதல்கள்
- அனுமதிக்கப்பட்ட முதலீடுகளின் அத்தகைய முதலீடு அதே உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கின் ஊடாகக் கணக்குவைத்திருப்பவரினால் செய்யப்பட்டுள்ளவிடத்து (வழங்குநரினால் கூட்டிணைப்புச் செயற்பாடொன்றின் பயனால் முதலீட்டாளர் ஒருவரை வந்தடைகின்ற எவையேனும் அடுத்துவரும் பங்குகள், உரிமையொன்றின், உரித்துடைமையொன்றின் அல்லது மாற்றமொன்றின் பிரயோகம் உட்பட) கணக்கு வைத்திருப்பவரினால் அத்தகைய வாங்குநருக்கு அனுமதிக்கப்பட்ட முதலீடுகளின் விற்பனை தொடர்பில் வேறோர் ஆளின் (அதாவது வாங்குநர்) உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றிலிருந்தான (IIA) கைமாற்றல்கள்
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளினால் அனுமதிக்கப்பட்டவாறாக அதே கணக்கு வைத்திருப்பவரின் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்கிலிருந்தான (CTRA) கைமாற்றல்கள்
- காலத்துக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய வேறு ஏதேனும் வகுதியினவான கணக்குகளிலிருந்தான கொடுக்கல்வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள்
- கணக்கில்; வைத்திருக்கப்படும் நிதிகளின்மீது உழைக்கப்பட்ட வட்டி
- கணக்கில்; வைத்திருக்கப்படும் நிதிகளின்மீது உழைக்கப்பட்ட வட்டி
- இலங்கை ரூபாக்களில் இலங்கையிலான செலுத்தீடுகள்
- கணக்கு வைத்திருப்பவர் சார்பில் வெளித்திரும்பல் அனுப்புதொகைகள்
- அதே கணக்கு வைத்திருப்பவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்குகள் (IIA), தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் ( PFCA) அல்லது கரைகடந்த வங்கித் தொழில்கூறில் பேணபப்டும் கணக்குகளுக்கான கைமாற்றுதல்கள்
- 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட அனுமதியின் நியதிகளின்படி இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆட்களினால் இலங்கையில் பொறுப்பேற்கப்பட்ட மூலதன கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான கொடுப்பனவுகள
- 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பொதுவான அல்லது விசேடமான அங்கீகாரத்தின் நியதிகளின்படி வெளிநாட்டு நாணயக் கடன்கள் பெறப்பட்டுள்ளவிடத்து, இலங்கையில் வதிகின்ற ஆட்களுக்கு அத்தகைய கடன்கள் தொடர்பான செலுத்தீடுகள்
- அத்;தகைய கடன்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அனுமதிக்கப்டட கடல்கடந்த மூலதனக் கொடுக்கல்வாங்கலுக்கு நிதியளிக்கும் நோக்கத்துக்காகப் பெறப்பட்டுள்ளவிடத்து, (அதவது, வெளித்திரும்பல் முதலீடொன்று) கடன் பெறுநரின் வெளித்திரும்பல் முதலீட்டுக் (OIA) கணக்குக்கு வெளிநாட்டு நாணயக் கடன்களின் வரும்படிகளைக் கைமாற்றுதல் (தனிசுப் பிணையங்களுட்பட)
- அதே கணக்கு வைத்திருப்பவரின் தூதுவ வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கும் (DFA), தூதுவ ரூபாக் கணக்குகளுக்குமான (DRA) கைமாற்றல்கள்
- கணக்கு வைத்திருப்பரினால் அத்தகைய விற்பனையாளரிடமிருந்து ஏதேனும் அனிமதிக்கப்பட்ட முதலீட்டின் கொள்வனவு தொடர்பில் வேறோராளின் (அதாவது, விற்பனையாளர்) உட்திரும்பல் முதலீட்டு கணக்குக்கான கைமாற்றல்கள்
- காலத்துக்குக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதியளிக்கக்கூடிய வேறேதேனும் வகுதியினவான கணக்குகளிலிருந்தான, கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள்
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்பட்ட அனுமதியின்மீது வெளிநாட்டு நாணய கடனைப் பெற்றுள்ளவிடத்து (இலங்கைக்கு வெளியே மூலதன கொடுக்கல்வாங்கலுக்கான நோக்கத்தில் பெறப்பட்ட கடனைத் தவிர்த்து), அத்தகைய கடன்களின் வரும்படிகளை (தனிசுப் பிணையங்கள் உட்பட) இலங்கையில் வதிகின்ற ஆட்களுக்கு (அத்தகைய கடன் பெறுநர்களுக்கு) உரிய வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA) கைமாற்றுதல்
வெளித்திரும்பல் முதலீட்டுக் கணக்கு
தகுதி
- உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியைத் தவிர்த்து, 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்.
- 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரகாரம் உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி அல்லது உத்தரவு பெற்ற விசேட வங்கி.
- மத்திய வங்கி, பிணைப்பொறுப்புச் செலாவணி ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தும் ஆணைக்குழு என்பவற்றின் கீழ் ஒழுங்குறுத்தப்பட்ட ஃஉத்தரவு பெற்ற நிறுவனங்கள் (மேலே 3.1 மற்றும் 3.2 இன் கீழ் தகைமை பெற்ற முதலீட்டாளர்களைத் தவிர்த்து).
- 1958 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேலாப நிதியச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் அல்லது தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளிப்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம்.
- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பங்குடைமை - மற்றும் ;
- இலங்கையில் குடியிருக்கின்ற நபர் அல்லது அத்தகைய நபரொருவரால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியுரிமை வணிகம் (ஏற்புடையதான வகையில்).
விஷேட நன்மைகள்
- வட்டி வீதம்
புதிய வட்டி வீதத்திற்காகத் தயவுசெய்து hவவிள:https://www.peoplesbank.lk/interest-rates/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.
தேவைப்படும் பத்திரங்கள் மற்றும் தகவல்கள்
- தனிநபர்களுக்காக, கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம், தேசிய அடையாள அட்டையின் அல்லது செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதி (விண்ணப்பதாரரின் விபரம், விசா மற்றும் மாற்றுவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டமை அடங்கிய பக்கம்). உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் (முலுஊ) மாதிரி படிவம், மற்றும் வெளிநாட்டு கணக்குகள் வரியை இணங்கியொழுகும் சட்டத்திற்கான வெளிப்படுத்துகை, (குயுவுஊயு) மற்றும் விதிக்கப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட பத்திரங்கள்.
- பங்குடைமை வியாபாரம் மற்றும் கம்பனிகள் சம்பந்தமாகக் கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம் மற்றும் தகுந்தவாறு அடையாளம் காணும் ஆவணங்கள், முலுஊ மாதிரி படிவம், வெளிநாட்டு கணக்கிற்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டத்திற்கான வெளிப்படுத்துகை (குயுவுஊயு) மற்றும் விதிக்கப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட பத்திரங்கள்.
பொது விடயங்கள்
- வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கொன்றைச் (ழுஐயு) சேமிப்பு அல்லது நிலையான வைப்புகள் (வெளிச் செல்லும் முதலீட்டிலிருந்து பெறப்படும் நன்மைகளிலிருந்து) அல்லது நடைமுறை (மேலதிகப்பற்றாக்கும் மற்றும் காசோலை எழுதிக்கொடுக்கும் வசதிகள் இன்றி) வெளிநாட்டு நாணயக் கணக்கு என்ற வகையில் கீழே காட்டப்பட்டுள்ள நாணயங்களில் திறந்து பேண முடியும். அதாவது, அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண், யூரோ, அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், ஹொங்கொங் டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பான் யென், சுவீடி~; குறோனர், நியுசீலாந்து டொலர், டெனி~; குறோனர், நோர்வேஜியன் குறோனர், சீன யுவான், சுவிஸ் பிரேங், தாய் பாத், மற்றும் இந்திய ரூபாய்.
- வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்குகளைத் (ழுஐயுள) தனிநபர் கணக்குகளாக வைத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் பதிவுசெய்துள்ள தனி உரித்துள்ள தனிநபர்கள், அத்தகைய நபரொருவருடன் இணைந்த கணக்குகளாகவும் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்குகளை (ழுஐயுள) வைத்துக்கொள்ள முடியும்.