வெளிநாட்டு
நாணயக் கணக்கு

PFCA

தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள்

SFNFDA

சிரேஷ்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான நிலையான வைப்பு வெளிநாட்டு...

SFNRA

சிரேஷ்ட நாட்டினத்தவர் அல்லாதவர்களின் ரூபாக் கணக்குகள்

PFCA

தகுதி

  • இலங்கை நாட்டினத்தவராகவுள்ள பராயமடையாதவர் உட்பட்ட தனியாளொருவர்.
  • இலங்கைக்கு வெளியே வதிகின்ற பராயமடையாதவர் உட்பட இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட தனியாளொருவர்
  • இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவரல்லாத வதிவுள்ளவரொருவர்
  • ஒன்றில் இலங்கைக்குத் தற்காலிகமாக வருகைதருகின்ற அல்லது இலங்கைக்கு வருகைதருவதற்கு உட்கருதுகின்ற நாட்டினத்தவரல்லாதவரொருவர்
  • அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடம் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைப்(PFCA) பேணிவந்த ஓர் இறந்துள்ள ஆளின் மரணச்சொத்தினது நிருவாகம் பூர்த்திசெய்யப்படும்வரை அத்தகைய இறந்துள்ள அந்த ஆளின் மரணச்சொத்தினது நிருவாகி அல்லது நிறைவேற்றுநர்.

விஷேட நன்மைகள்

  • பற்று (டெபிட்) அட்டை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது
  • கணக்கில் உள்ள தொகைக்கு எதிராக கடனட்டை வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
  • மாதாந்த வட்டி.

பொது விடயங்கள்

  • PFCAs can be opened and maintained as Savings, Current (without cheque drawing facility) or Fixed Deposit accounts in any designated foreign currency, i.e. USD,GBP, EUR, AUD, CAD, HKD, SGD, JPY, SEK, NZD, DKK, NOK, CNY, and CHF, in the domestic banking unit.
  • PFCAs may be held as joint accounts with another eligible person. However, non- nationals either on temporary visit to Sri Lanka or intending to visit Sri Lanka are not eligible to open and maintain these accounts as joint accounts.

பெற்றுக்கொள்ள வேண்டிய பத்திரங்களும் தகவல்களும்

தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைத் (PFCA) திறப்பதற்கு முன்னர் ஏற்புடையதான வகையில் பின்வரும் தகவல்களையும் பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • முழுப் பெயர், நாட்டினம், முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
  • தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் (புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) பிரதி.
  • பராயமடையாதவரெனின், பிறப்புச் சான்றிதழின் பிரதி.
  • கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
  • FATCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
  • வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்

  • முழுப் பெயர், நாட்டினம், வெளிநாட்டு முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் (புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) பிரதி.
  • பராயமடையாதவரெனின், பிறப்புச் சான்றிதழின் பிரதி.
  • இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்ற திகதி.
  • வெளிநாட்டு அரசொன்றினால் வழங்கப்பட்டுள்ள பிரசாவுரிமை/விசா தன்மை
  • கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
  • FATCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
  • வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்

  • முழுப் பெயர், நாட்டினம், வெளிநாட்டு முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
  • இலங்கையில் தொழில்புரியும் இடத்தின் முவரியும் பதவியும் (இருப்பின்)
  • தொழில் ஒப்பந்தத்தின் பிரதியும் சம்பள விபரங்களும்.
  • கடவுச்சீட்டின்(புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசா குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களின் பிரதிகள்.
  • கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
  • FTCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
  • வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்

  • முழுப் பெயர், நாட்டினம், முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
  • கடவுச்சீட்டின்(புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசா குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களின் பிரதிகள்.
  • கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
  • FTCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)


  • வங்கித்தொழில் முறைமையினூடாகக் கணக்கு வைத்திருப்பவரின் சார்பில் இலங்கைக்கு வெளியிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு செலாவணியிலான அனுப்புதொகைகள்
  • மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறு பயண நோக்கத்துக்காக தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கைப்(PFCA) பற்று வைப்பதன்மூலம் கணக்கு வைத்திருப்பவரினால் பெறபப்ட்ட பயன்படுத்தப்படாத வெளிநாட்டு நாணயம்
  • கணக்கு வைத்திருப்பவரினால் வெளிப்படுத்துகையின் மேல் இலங்கையினுட் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி (அதவது, அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெ டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதை விஞ்சுமிடத்து அல்லது அதற்குச் சமமாகவிருக்குமிடத்து சுங்கத்திணைக்களத்துக்கான வெளிப்படுத்துகை ஒன்றின்மீது அல்லது அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெநா டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதற்குக் குறைவாகவிருக்குமிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட வியாபரிகளின் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிகளின் வெளிப்படுத்துகை ஒன்றின்மீது)
  • கணக்கு வைத்திருப்பவரைப் பொருட்படுத்தாது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PFCAs), வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCAs)) அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறில் பேணப்பட்ட கணக்குகள் என்பவற்றிலிருந்தான கைமாற்றல்கள்
  • கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு வெளியே வதிவுள்ளவராகவிருக்குமிடத்து அல்லது இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாதவராகவிருக்குமிடத்து, அதே கணக்கு வதை;திருப்பவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கிலிருந்தான (IIA) கைமாற்றல்கள்.
  • மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறு அதே கணக்கு வதை;திருப்பவரின் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்கிலிருந்தான (CTRA)கைமாற்றல்கள்.
  • வேறெவரேனுமாளின் தூதுவ வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்தான ( DFAs) கைமாற்றல்கள்
  • மூலக் கைமாற்றல், தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கைப்(PFCA) பற்றுவைப்பதன்மூலம் செய்யப்பட்டிருப்பின் அல்லது இக்கட்டளை பயனுடையதாக வருமுன்னர் கணக்குவைத்திருப்பவரின் வதிவற்றவர் வெளிநாட்டு நாணயக் (RFC) கணக்கு, வதிவுள்ளவர் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கு, அல்லது வதிவுள்ள நாட்டினத்தவர் அல்லாதவரின் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கு என்பவற்றிலிருந்து செய்யப்பட்டிருப்பின் வெளிநாட்டு நாணயத்தில் இலங்கையில் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து எழுகின்ற, மூலதன ஈட்டுகைகள் மற்றும் வேறு பெறுகைகள்
  • மூல முதலீடு இக்கட்டளை பயனுக்கு வருமுன்னர் கணக்குவைத்திருப்பவரின் வதிவற்றவர் வெளிநாட்டு நாணயக் (NRFC) கணக்கு, வதிவுள்ளவர் வெளிநாட்டு நாணயக் (RFC) கணக்கு, அல்லது வதிவுள்ள நாட்டினத்தவர் அல்லாதவரின் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கைப் பற்றுவைப்பதன்மூலம் செய்யப்பட்டிருப்பின் வெளித்தரும்பல் முதலீட்டுக் (OIA) கணக்கொன்றினுள் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட மூலதனமும் மூலதன ஈட்டுகைகளும்
  • வெளிநாட்டுப் பயண அட்டை தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து (PFCA) நிரப்பப்பட்டிருந்த தொகைவரை, அதே கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டுப் பயண அட்டையில் எஞ்சியுள்ள பயன்படுத்தப்படாத மீதி
  • கணக்குவைத்திருப்பவர் இலங்கையில் வதிகின்ற நாட்டினத்;தவர் அல்லாத ஊழியரொருவராகவிருக்குமிடத்து, மாதாந்தச் சம்பளமாக, தொழில் நன்மைகளாக மற்றும் வேறு தொடர்புபட்ட நன்மைகளாகத் தொழில்தருநர்களின் இலங்கை ரூபாக் கணக்கிலிருந்தான கைமாற்றல்கள்.
  • கணக்குவைத்திருப்பவர் இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாத ஊழியரொருவராகவிருக்குமிடத்து, வரவுவைக்கும் நாளன்று பெறப்பட்ட செலாவணி வீதத்தில் மாற்றப்பட்ட, வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதற்காக மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட இலங்கை ரூபாக்களினாலான தொகைகள்
  • காலத்துக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய வேறு ஏதேனும் வகுதியினவான கணக்குகளிலிருந்தான கொடுக்கல்வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தயை கொடுக்கல்வாங்கல்களிலுருந்தான கைமாற்றல்கள்.
  • சட்டத்தின் 8 (3)ஆம் பிரிவின் நியதிகளின்படி கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து இலங்கைக்கு வெளியேயிருந்து அனுப்பப்படும் அனுப்புதொகைகள்

Contact Us

  • Manager - Foreign Currency Department , People’s Bank, Overseas Customer Services
  • +94 112332745
  • 0112332746 / 2334278 / 2437621 / 2446409
  • nrfc@peoplesbank.lk
Enquire Now